August 19, 2019 தண்டோரா குழு
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார். 2006-ம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் அறிமுகமான சாரா டெய்லர், இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதற்கிடையில், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. வர இருக்கும் ஆஷஸ் டி20 தொடரிலும் அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு சாரா டெய்லர், தனது நிர்வாண புகைப்படத்தை அளித்துள்ளார். அதில், ஆடையின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போன்று போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தை சாரா டெய்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ஏன் இதனை வெளியிட்டுள்ளேன் என்ற காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதில், என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,சாரா டெய்லர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது