• Download mobile app
05 Dec 2024, ThursdayEdition - 3221
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக 20 வயதே ஆன ரஷீத் கான் நியமனம் !

July 13, 2019 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான் அணியின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிக்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. குப்தின் நெய்ப் தலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேப்டனை மாற்றியுள்ளது.

இதையடுத்து, 20 வயதே ஆனா ரஷீத் கானை புதிய கேப்டனாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று அனைத்து வகையான போட்டிக்கும் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுவரும் ரஷித் கான், ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஹைதராபாத் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, 20 வயதே ஆகும் ரஷித் கான், தற்போது சர்வதேச கிரிக்கெட் அணியில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க