March 11, 2017
tamilsamayam.com
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா, அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவல், உலகின் நம்பர்-3 வீராங்கனையான கொரியாவின் சங் ஜி யுனை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை 20-22 என இழந்த சாய்னா, தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டையும் 20-22 என போராடி தோற்றார்.
முடிவில், இந்தியாவின் சாய்னா நேவல், கொரியாவின் சங் ஜி யுனிடம் 20-22, 20-22 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.