August 30, 2017
தண்டோரா குழு
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது.பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று 2-வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 4-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணியின் வார்னர் சதம் அடித்து அசத்தினார். எனினும் அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே ஆஸி. அணி 244 எங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்க தேச அணியின் ஆல்ரவுண்டர் சாகிப் உல் ஹசன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வரலாற்று வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.