December 8, 2020 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள், டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.இதில், ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
இதையடுத்து, நடந்த 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வென்றது.இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 186 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 174 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.