January 6, 2021 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ரஹானே, ரோஹித் சர்மா,புஜாரா,ரிஷப் பண்ட், விஹாரி, கில், ஜடேஜா,அஸ்வின், பும்ரா,சிராஜ் மற்றும் முதல் முறையாக சைனி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.தமிழகத்தை சேர்ந்த நட்ராஜ் இப்போட்டியில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.