February 15, 2019 தண்டோரா குழு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இரண்டு டி-20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதலாவது டி-20 போட்டி வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி 27-ம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டி-20 தொடருக்கான இந்திய அணியில் விராத்கோலி தலைமையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மான்யக் மார்கண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு நாள் தொடரில் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி தலைமையில், ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கவுல், கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் கடைசி 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி – விராட் கோலி தலைமையில் , ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஆகியோர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.