December 3, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலிய அணி தற்போது பலவீனமாக உள்ளது என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர்,
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும்.அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்த நிலையில், தற்போது அவர்கள் இல்லாததால் அந்த அணி பலவீனமாகி உள்ளது.இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.