May 8, 2019 தண்டோரா குழு
காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் பங்கேற்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் தோள்பட்டை காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே ரிச்சர்ட்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி மே 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இலங்கை மற்றும் இங்கிலாந்தி அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது.