September 24, 2020 தண்டோரா குழு
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59). ஆஸ்திரேலியவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். 1986 ல் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து பிரபலமானவர்.
இந்நிலையில்,ஐபிஎல் வர்ணணைக்காக மும்பை ஹோட்டலில் தங்கி இருந்த அவர் ஹோட்டல் லாபியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.அவருடன் தங்கி இருந்த சக வர்ணணையாளரான பிரெட் லீ முதலுதவி அளித்தும் டீன் ஜோன்சை காப்பாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.