இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது சச்சினை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
17வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி துவங்கிய இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் நேற்று இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சென்றிருந்தார்.
அப்போது போட்டி வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினை, சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்
திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
3வது இந்தியா ஐடிஎம்இ விருதுகள் 2025: விருதை வெல்ல ஜவுளி துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை!