February 16, 2021 தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் 134 ரன்னில் சுருண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் இந்திய அணியின் அக்சர் படேல் – 5, அஷ்வின் – 3, குல்தீப் யாதவ் – 2 விக்கெட் வீழ்த்தினர்.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுத்துள்ளது.