May 30, 2019 தண்டோரா குழு
12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் எதிர்கொள்கிறது.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் நேற்று இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைப்பின் பேரில் சென்றனர்.
அங்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி ஆகியோரை கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து,இங்கிலாந்து அரண்மனைக்கு கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் சென்ற புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.