February 7, 2017
tamilsamayam.com
அஸ்வினுக்கு எதிராக போட்டியாக கருதவில்லை என வங்கதேச ஆல்ரவுண்டர் சகில் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் வீரர்கள் வரிசையில் முதல் இரண்டு இடத்தில் உள்ள இந்தியாவின் அஸ்வின் மற்றும் வங்கதேசத்தின் சகிப் அல் ஹசன் ஆகிய வீரர்களுக்கு இடையே இந்த போட்டியில் கடும் போட்டி நிலவும் என கருதப்படுகின்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சகிப் அல் ஹசன், “நான் அஸ்வினை என் போட்டியாக கருதவில்லை. எங்களுக்குள் எந்த போட்டியும் கிடையாது. நாங்கள் சார்ந்துள்ள அணிக்கு வெற்றியை தேடித்தர எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகைகளில் உதவ முயற்சிக்கின்றோம்.
அவரவர் அணியில் எந்த சூழலில் அந்த அந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட மட்டுமே ஒவ்வொரு வீரரும் விரும்புவார்கள். அதனால் அஸ்வினை நான் என் போட்டியாக கருதவில்லை. அவரும் அதேபோல் கருத வாய்ப்பில்லை. இருவரும் சிறந்த பங்களிப்பைத் தான் தரமுடியும்.
இந்தியாவுக்கு எதிராக சாதிக்க முடிந்தால் அது நல்ல விஷயம் தானே.?” என கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் மற்றும் இந்திய அணி அந்தந்த நாடுகளில் அபாரமாக வெற்றி பெற்றிருப்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என கருத்து நிலவுகின்றது.