March 29, 2019 தண்டோரா குழு
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்து சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் வரை மாஸான தமிழ் சினிமா வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை டிவீட்களாக பதிவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இதற்கிடையில், 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் ஹர்பஜன்சிங் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்தே ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில், முதல் முறையாக தமிழில் பாடல் பாடி ஹர்பஜன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம்,அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்.என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு.இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே. நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல @ChennaiIPL #Yellove கேளு கேளு இது கானா பாட்டு என பதிவிட்டுள்ளார்.