August 21, 2017
tamilsamayam.com
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வீரர்களுக்கு பிஸ்கட்களை அந்த அணி நிர்வாகம் தடை செய்ட்துள்ளது.
இலங்கை சென்ற இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதை 3-0 என இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இத்தொடரில் இலங்கை அணி வீரர்களுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பிஸ்கட்டுகளை அந்த அணி நிர்வாகம் தடைவிதித்தது தெரியவந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடரின் போது, இலங்கை அணி வீரர்களுக்கு வழங்கிய பிஸ்கட்களை அணி நிர்வாகத்தினர் எடுத்துச்செல்ல சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆனால், அணி நிர்வாகிகள், பிஸ்கட்களை தடை செய்த முடிவு பயிற்சியாளர், மற்றும் பிஸிசோ ஆகியோரின் முடிவு என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை அணி நிர்வாகிகளுடன் இலங்கை அணி வீரர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.