June 2, 2017
tamilsamayam.com
முன்னாள் இந்திய கேப்டன் தோனி, வரும் 2019 உலகக்கோப்பை வரை விளையாட தகுதியுடன் உள்ளதாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீவன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் ‘தல’ தோனி. இவர் ஐ.சி.சி., யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை (டி-20( 2007), ஒருநாள் (2011), சாம்பியன் டிராபி (2013)) வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.
இவர், தன் மீது எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014 பாக்சிங் டே டெஸ்ட் உடன் ஓய்வு பெற்றார். பின் ஒருநாள், டி-20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போதும் தோனி மீது மோசமான பார்ம் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவர் வரும் 2019 உலககோப்பை வரை விளையாட தகுதியுடன் உள்ளதாக முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் ஸ்டீவன் பிளமிங் தெரிவித்துள்ளார்.