May 9, 2017
தண்டோரா குழு
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி சாதனை புரிந்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் ஜுலன் கோஸ்வாமி 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம்ஒரு நாள் போட்டிகளில்அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
181 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் ஆஸ்திரேலிய வீராங்கனையின் சாதனையை ஜுலன் கோஸ்வாமி முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜுலன் கோஸ்வாமி இந்த சாதனையை படைத்துள்ளார்.