December 2, 2020 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கான்பராவில் நடந்தது.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி
50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (66), பாண்ட்யா (92) அவுட்டாகாமல் இருந்தனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், லபுசேன் ஜோடி துவக்கம் கொடுத்தது. நடராஜன் ‘வேகத்தில்’ லபுசேன் (7) போல்டானார்.இதன் மூலன் நட்ராஜ் ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக தனது முதல் விக்கெட்டை எடுத்தார். இறுதியில்
ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 289 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.இந்திய அணிக்காக ‘வேகத்தில்’ மிரட்டிய ஷர்துல் தாகூர் 3, பும்ரா, நடராஜன் தலா 2 விக்கெட் சாய்த்தனர். இருப்பினும் தொடரை 1-2 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.