January 17, 2019
தண்டோரா குழு
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 23-ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் அணிக்கு திரும்பி உள்ளார்.
நியூசிலாந்து அணி பின் வருமாறு:-
வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கொலின் முன்ரோ, மெத் ஹென்ரி, நிக்கோலஸ், பெர்குசன், டாம் லாதம், பிரஸ்வெல், டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, இஷ் சோதி.