January 30, 2019
தண்டோரா குழு
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்ததும், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி:
கனே வில்லியம்சன் (கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ந்ஹோம், பெர்குசன், (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்) மார்டின் குப்தில், ஸ்காட் குக்கெலின், டேர்ல் மிட்செல், கோலின் முன்ரோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர், பிளேர் டிக்னெர் (மூன்றாவது போட்டிக்கு மட்டும்).
நியூசிலாந்து – இந்தியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.