January 26, 2017
தண்டோரா குழு
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் 20 ஓவர் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்தியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 36 ரன்களும் டோனி 34 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை இங்கிலாந்து எட்டியது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 51 ரன்களும், ரூட் 42 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என்று இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.