January 16, 2017
tamil.samayam.com
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு யுவராஜ் சிங்கை தேர்வு செய்ததது ஏன் என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில், நீண்ட இடைவேளைக்கு பின் ‘தல’ தோனி பங்கேற்கிறார். தவிர, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் களமிறங்கவுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் கேப்டனாக களமிறங்கிய தோனி, தோல்வியுடன் பதவிக்கு முழுக்கு போட்டார். இதையடுத்து இந்திய கிரிக்கெட்டுக்கும் இளம் விராட் கோலி தலைமை ஏற்றார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்குகிறது.
தோனி கேப்டனாக இருந்த வரை யுவராஜ் சிங் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஆனால் கோலி பொறுப்பேற்றுக்கொண்டவுடன் யுவராஜ் சிங் அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கான காரணத்தை கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோலி கூறியது:
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரொம்ப வீக்காக உள்ளதாக உணர்ந்தோம். கடைசி நேரத்தில் தோனி மட்டும் தனியாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் அதைசரி செய்ய யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்க யோசனை செய்தோம். அதனால், அவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அவசியமானது.இவ்வாறு கோலி கூறினார்.