June 8, 2017
tamilsamayam.com
இலங்கைக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 321 ரன்களை குவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகின்றது. இன்று நடைப்பெறும் 8வது போட்டி, குரூப் ‘பி’யில் இடம்பெற்றுள்ள இந்தியா – இலங்கை அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது.
இந்தியாவுக்கு தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா, சிகர் தவான் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்களை குவித்தனர். ரோகித் சர்மா 78 ரன்களை எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த கோலி வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமலும், யுவராஜ் சிங் 7 ரன்னிலும் அவுட்டானர்.பின்னர் ஜோடி சேர்ந்த தவான் – தோனி இணை சிறப்பாக ரன்களை சேர்த்தது. இவர்களின் இணை 82 ரன்களை சேர்த்தது.தவான் 10 வது சதத்தை கடந்து 125 ரன்கள் எடுத்த போது அவுட்டானர். அவரை தொடர்ந்து அரை சதம் கடந்த தோனி 63 ரன்னில் அவுட்டானார்.
கடைசியில் கேதார் ஜாதவ் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்து அசத்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 3, தவான் 1, தோனி 2, பாண்டியா 1, ஜாதவ் 1 சிக்ஸர் விளாசி வானவேடிக்கை காட்டினர்.