March 12, 2020 தண்டோரா குழு
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
போட்டி தொடங்கும் போதே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கபட்டது.