April 19, 2017
tamilsamayam.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது .
சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 2-1 என தொடரை வென்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு முன்னதாக வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து என தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை வென்றதால் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இளம் டெஸ்ட் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்திருந்தது பிசிசிஐ.
இந்நிலையில் இந்த பரிசுத்தொகையை இந்திய அணிக்கு ரூ.1 கோடியாக அதிகரித்து தற்போது அறிவி்த்துள்ளது பி.சி.சி.ஐ.