January 15, 2022 தண்டோரா குழு
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, டி20 உலககோப்பைக்கு பிறகு இந்தியாவின் டி20 போட்டிகளில் கேட்பன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவின் இருபது ஓவர் அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.இதையடுத்து, டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி தென்னாப்ரிக்காவிடம் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்து.
இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.