November 27, 2019 தண்டோரா குழு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 3 டி2௦ மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில்,இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக விலகினார். இதனால் ஷிகர் தவானுக்கு பதிலாக அணியின் துவக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன், பின்னர் காரணமே தெரிவிக்காமல் நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.