October 23, 2019
பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிசிசிஐ-யின் 39வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தங்கள் முன்பு சில கடுமையான சவால்கள் உள்ளதாகவும், அதை திறன்பட எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உலக கிரிக்கெட் அரங்கில், இந்திய அணி சிறந்து விளங்க அணி நிர்வாகம் எதை கேட்டாலும் தனது தலைமையிலான நிர்வாகம் செய்துக் கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் தான் பேசியதாக கூறிய கங்குலி, கோலி அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்று பாராட்டினார்.