February 5, 2018
tamilsamayam.com
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து, அமெரிக்காவின், பெய்வன் ஜாங்கை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை பெய்வன் 21-18 என கைப்பற்றினார். இதற்கு இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட சிந்து 21-11 என பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை தீர்மானி க்கும் மூன்றாவது செட்டில் இருவரும் கடினமான போராட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பெய்வன் 22-20 என செட்டை போராடி கைப்பற்றினார்.முடிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து, அமெரிக்காவின், பெய்வன் ஜாங்கிடம் 18-21, 21-11, 20-22 என போராடி இரண்டாவது இடம் பிடித்தார்.
தங்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்ட போதும், சிந்து வெள்ளி வென்று ஆறுதல் அளித்தார்.