January 13, 2017
tamil.oneindia.com
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடையை பி.சி.சி.ஐ அறிமுகபடுத்தியுள்ளது.
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் புதிய சீருடையுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
முதல் போட்டி 15ம் தேதி தொடங்குகிறது. இந்த புதிய சீருடையை ஸ்பான்சர் நிறுவனமான நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. புதிதாக அறிமுகபடுத்தியுள்ள இந்த ஜெர்சியை, கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புது ஜெர்சியுடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உள்ள புகைப்படத்தை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் இந்திய வீரர்கள் தோனி, விராட் கோஹ்லி, அஷ்வின், ரஹானே மற்றும் மகளிர் அணி கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பீரீட், மிதாலி ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த சீருடை பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டது. கம்ஃபோர்ட்டானது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.