December 24, 2018
தண்டோரா குழு
நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தோனி இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடர் டிராவில்முடிந்துள்ளது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3 வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்ததும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதைபோல் அடுத்த மாத இறுதியில் நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகளில் விளையாடவுள்ளது.
இத்தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணி விளையாடிய 6 ‘டுவென்டி-20’ போட்டிகளுக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை.
ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி.
’டுவென்டி-20′ அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.
தோனி மீண்டும் டி20 அணியில் இடம்பிடிதுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.