September 6, 2017
tamilsamayam.com
இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் இடத்தை பூர்த்தி செய்ய இதுவரை எந்த வீரராலும் இயலவில்லை.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 உள்ளிட்ட போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஒரே ஒரு சர்வதேச டி-20 போட்டி இன்று நடக்கிறது. இத்தொடரில் யுவராஜ் சிங், ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுல் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மோசமான் பார்ம், தகுதி தேர்வில் தோல்வி என யுவராஜ் சிங் இந்திய அணியில் ஒதுக்கப்பட்டதால், அவரது மிடில் ஆர்டர் இடம் காலியானது. இவருக்கு பதிலாக அந்த இடம் ராகுலுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் சாதித்த ராகுலால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவு சாதிக்க முடியவில்லை.
ராகுல் மட்டும் இல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக நான்காவது வீரராக களமிறங்கிய எந்த வீரராலும் யுவராஜ் சிங் இடத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டில் யுவராஜ் சிங் பங்கேற்ற 10 ஒருநாள் போட்டிகளில் 1 சதம், 1 அரைசதம் உட்பட 358 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் நான்காவது வீரராக களமிறங்கிய மற்ற எந்த வீரராலும் இந்த அளவு கூட சாதிக்க முடியவில்லை.