September 28, 2017
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து மேற்கு இந்திய தீவு அணிகள் மோதியது.இப்போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் அதிரடியாக விளையாடினார்.இந்நிலையில் 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எவின் லீவிஸ் காயமடைந்தார்.
இந்நிலையில் வலியால் துடித்த அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இதையடுத்து மிகுந்த ஏமாற்றத்துடன் ஸ்டிரச்சர் உதவியுடன் வெளியேறினார்.22 பந்துகள் மீதமிருந்த நிலையில் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் இரட்டை சதம் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.