February 25, 2021 தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் நாளில் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 53.2 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து தனது இரண்டவது இன்னிங்சை துவங்கியது.ஆனால் இந்திய அணியின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் 81 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.