July 26, 2017
தண்டோரா குழு
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சதம் அடித்துள்ளார்.
இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். காய்ச்சல் காரணமாக ராகுல் விலகியதால் இந்திய அணியில் அபினவ் முகுந்த் சேர்க்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா இன்று அறிமுக டெஸ்டில் ஆடுகிறார்.
இதனையடுத்து துவக்க வீரராக களமிறங்கிய அபினவ் முகுந்த் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தவான்- புஜாரா ஜோடி சிறப்பாக ஆடி வருகின்றனர். புஜாரா அமைதி காக்க தவான் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கிறார்.
உணவு இடைவேளை முடிந்துள்ள நிலையில் சமீபத்திய நிலவரப்படி 45ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 245ரன்களை குவித்திருக்கிறது இந்தியா. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்தார். தவான் இதே கல்லே மைதானத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சதமடித்திருந்தார்.தவான் 156பந்துகளில் 27பௌண்டரியுடன் 167ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.