March 14, 2022 தண்டோரா குழு
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
அதிக பட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்தது.
இதையடுத்து, 2வது இன்னிங்சில் இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.