June 1, 2019 தண்டோரா குழு
12வது 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கியது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை மோதின.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனை தொடர்ந்து இலங்கை அணி முதலில் களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியமால் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது.அண்ட் அணி தரப்பில் கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி,பெர்குஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.துவக்க வீரர்களாக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ அதிரடியாக விளையாடினர். முடிவில் நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குப்தில் 73 ரன்களும் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர்.