• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளம் வீரர்களுக்கு வழிவிட்ட தோனி அடித்த 2வது அரைசதம்

February 23, 2018 tamilsamayam.com

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் தொடரிலேயே வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெருமை முன்னாள் கேப்டன் தோனியை சாறும்.
2007ல் டி20, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிரோபி (மினி உலகக் கோப்பை) ஆகிய மூன்று வகையான உலகக் கோப்பைகளை வென்று சாதித்த கேப்டன் என்ற பெருமை தோனி பெற்றவர்.

2வது அரை சதம் :
பல இளம் வீரர்களை முன்னனி வீரர்களாக மாற்றிய பெருமை தோனிக்கு உண்டு. கடந்த 2006ம் ஆண்டு டி20யின் முதல் போட்டியில் விளையாடிய தோனி, தற்போது வரை மொத்தம் 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது தான் 2வது அரைசதம் அடித்துள்ளார். மிக குறுகிய போட்டி என்பதாலும், பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வழி கொடுத்து கடைசி நேரத்தில் மட்டும் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் தோனியால் தற்போது தான் 2வது அரை சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மெதுவாக விளையாடுகிறார் என்று சிலர் தோனி மீது குற்றம்சாட்டி வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று வெறும் 28 பந்தில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி 52* ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.இவர் கடைசியாக 65 போட்டிகளில் அரைசதம் அடிக்கவில்லை, அதோடு கடைசி 12 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் 2 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார்.

மேலும் படிக்க