August 15, 2017
tamilsamayam.com
ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் மாதிரி இனி இந்திய அணிக்கு இன்னொரு வீரர் கிடைப்பது கடினமான விஷயம்,என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர், கடந்த 2011ல் இந்திய அணி, உலகக்கோப்பை (50 ஓவர்) வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். பின் கேன்சரால், பாதிக்கப்பட்ட இவர், அமெரிக்காவில் கீமோதெரபி மூலம் முழுமையாக அதிலிருந்து மீண்டார்.
தொடர்ந்து தனது கடினமாக முயற்சியால், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் யுவராஜ் போல மீண்டும் இந்திய அணிக்கு ஒரு மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் கிடைப்பது கடினம் என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில்,
இதுவரை இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் கைகொடுத்த அளவு அவரது தலைமுறை வீரர்களில் வேறுயாரும் கைகொடுக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு வீரரை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கவில்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தேர்வுக்குழுவினர் ஒரு வேளை அவருக்கு ஓய்வு அளிக்க திட்டமிட்டிருக்கலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டில் இந்திய அணி எத்தனை சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியிருக்கலாம், ஆனால் இந்திய அணிக்கு இனி யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரர் கிடைக்கபோவதில்லை என்பதில் சந்தேகமே இல்லை.’ என்றார்.