August 3, 2017
tamilsamayam.com
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மட்டமான தோல்விக்கு பின் இலங்கை அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நிறுத்திவிட்டதாக முன்னாள் இலங்கை அணி கேப்டன் ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை சென்ற ஜிம்பாப்வே அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இது ஜிம்பாப்வே அணிக்கு பெருமையான விஷயம் என்றாலும் இலங்கை அணிக்கு மகாமட்டமான விஷயம்.
இதனால், இலங்கை முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை இலங்கை அணி வீரர்கள் மீது கடுமையான காட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் இலங்கை அணி கேப்டன் ரணதுங்க, தனது அணி, பங்கேற்கும் போட்டியை பார்ப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரணதுங்கா கூறுகையில்,
“இலங்கை கிரிக்கெட்டை அதிகாரிகள் நிர்வாகிக்கும் விதம் மிகவும் மட்டமாக உள்ளது. இதனால் தான் இலங்கை அணி, கத்துக்குட்டி அணியிடம் மண்ணைக்கவ்வும் நிலை உள்ளது. தற்போது இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகளை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.” என்றார்.