December 4, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பெங்காள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை தொடர்ந்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டனும் ஓன்று. இந்நிலையில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை தொடர்ந்து பெங்காள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈடன் கார்டன் மைதானத்தில் இனிவரும் ஆட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று 50 இருக்கைகள் ஒதுக்கப்படும். ஜி பிளாக்கில் இருக்கும் முன்வரிசை இருக்கைகள் இனி மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்படும்.வரும் காலங்களில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கென்று சிறப்பு கழிப்பறைகள் மற்றும் அவகளுக்கென பிரத்தியோக வீல்சேர்கள் மற்றும் அவர்கள் வந்து செல்வதற்கான அணைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.