February 20, 2019 தண்டோரா குழு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி திட்டமிட்டபடி விளையாடும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இத்தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுந்தன.
இதற்கிடையில், உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டுமென இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார். பலரும் இக்கருத்தை முன் வைத்தனர். இதனால் உலககோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி தேவ் ரிச்சர்ட் சன்,
கிரிக்கெட் போட்டி, பலதரப்பட்ட மக்கள் மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்கும் அற்புத திறமை கொண்டது. அந்த அடிப்படையிலேயே போட்டிகளை நடத்த முயலுவதாகவும். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டியை ரத்து செய்வது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லைஎன தெரிவித்துள்ளார்.