April 15, 2019 தண்டோரா குழு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும்.
இதனை தொடர்ந்து உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணி :
1. விராத் கோலி (கேப்டன்)
2. ரோகித் சர்மா (துணை கேப்டன்)
3. ஷிகர் தவான்
4. கே.எல்.ராகுல்
5. எம்.எஸ்.டோனி (கீப்பிங்)
6. கேதர் ஜாதவ்
7. ஹர்திக் பாண்டியா
8. விஜய்சங்கர்
9. குல்தீப் யாதவ்
10. சாஹல்
11. முகமது சமி
12. பும்ரா
13. புவனேஸ்வர் குமார்
14. ஜடேஜா
15. தினேஷ் கார்த்திக்