February 5, 2019
தண்டோரா குழு
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக சர்ப்ராஸ் அகமதுவே செயல்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கும், 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமதுவே செயல்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லாகூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதைத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், ஏசான் மனி,
கேப்டனாகவும், ஒரு வீரராகவும் பல போட்டிகளில் சர்ப்ராஸ் அகமது நிரூபித்துள்ளார் எனத் தெரிவித்தார். மேலும், கள வியூகம் அமைப்பதில் அவர் கை தேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.