February 18, 2019 தண்டோரா குழு
வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்திய தீவுகள் அணி வீரா் கிறிஸ் கெய்ல் aஅறிவித்துள்ளார்.
ஒருநாள், டி20 போட்டி தொடங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரை எந்த வகையான போட்டியாக இருந்தாலும் சரி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரா் கெய்ல், அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். உலக கோப்பைக்குப் பின் நான் ஓய்வெடுக்கப் பார்க்கிறேன். 50 ஓவர் கிரிக்கெட்டைப் பொருத்தவரை உலகக் கோப்பை தான் எனது முடிவு. இளைஞர்களுக்கு வழிவிட்டு நான் அமைதியாக உட்கார்ந்து அவர்கள் கொண்டாடுவதைப் பார்க்கப் போகிறேன்” என்று ஒரு பேட்டியில் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
இதுநாள் வரை அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி கேட்kaக பட்டது அப்போது அவர், “நீங்கள் ஒரு உயர்ந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் தான் உலகிலேயே சிறந்த வீரன். நான் தான் உலகின் தலைவன். அது எப்போதும் மாறாது. நான் சாகும்வரை அது மாறாது” என்றார்.
மேலும், “உலகக் கோப்பையை வென்றால் அது மாயாஜாலக் கதையின் முடிவைப் போல இருக்கும். இளம் வீரர்கள் எனக்காக வென்று கொடுக்க வேண்டும். அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனக்காக அதை வென்று அந்த கோப்பையை என்னிடம் கொடுக்க வேண்டும். எனது யோசனைகளை நான் அவர்களுக்குத் தருவேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.