June 4, 2019 தண்டோரா குழு
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் விலகி உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இத்தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் நாளை மோதவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இரண்டு ஆட்டத்திலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் மூத்த பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின், உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் இத்தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக அந்த அணியில், பியூரன் ஹென்டிரிக்ஸ் (Beuran Hendricks) சேர்க்கப்பட்டுள்ளார்.