இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்திய அணிக்காக உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் பேசும்படியாக இல்லை என அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் முடிவை தோனி அறிவிக்க உள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தோனி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் பேசிவிட்டதாகவும், இந்த உலகக்கோப்பை முடிந்த பின்னர் விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோனி குறித்த இந்த புதிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்
திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
3வது இந்தியா ஐடிஎம்இ விருதுகள் 2025: விருதை வெல்ல ஜவுளி துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை!