April 23, 2018
தண்டோரா குழு
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நேற்று வில்லியம்ஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் மோதியது.இதில்,முதலில் பேடிங் செய்த சென்னை அணி அம்பதி ராயுடுவின் அதிரடியால் 182 ரன்கள் குவித்தது.பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 178 ரன்கள் எடுத்தது.சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 8 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ரஷீத் கான் களமிறங்கினார்.அப்போது,தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார்.இறுதி ஓவரில் 19 ஓவர்கள் தேவைப்பட்டது.இதில் முதல் 3 பந்துகளில் ஐதராபாத் அணியால் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 4-வது பந்தை சந்தித்த ரஷீத் கான் சிக்சருக்கு அனுப்பினார்.2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.இறுதி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை வீரர் பிராவோவின் அசத்தலான யாக்கர் பந்துவீச்சில் 1 ரன் மட்டுமே கிடைத்தது.இதன் மூலம் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில்,போட்டிக்கு பின் பேட்டியளித்த ரஷீத் கான்,
“நான் அதிரடியாக விளையாடியதற்கு முக்கிய காரணம் தோனி தான்.போட்டி துவங்குவதற்கு முன்னர் அவரிடம் இறுதிகட்டத்தில் பதற்றமின்றி விளையாடுவது குறித்த யுக்திகளை அறிந்து கொண்டேன்.இதுதான் நான் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாச உதவியது.இருப்பினும் அணியை வெற்றி அடைய செய்ய முடியாதது வருத்தமளிக்கிறது.உலகின் ஒரே பினிஷர் தோனி தான்”.இவ்வாறு அவர் கூறினார்.