June 23, 2020 தண்டோரா குழு
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்விற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஜோகோவிச்சுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது, அதேபோல் ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவருடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது.
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவிக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமலேயே திடீரென கொரோனா தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.